முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் இன்றையதினம் (13) குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
"குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" எனும் கருப்பொருளில் மாபெரும் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
குருதிக்கொடையில் ஈடுபட்டோர்
இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


