நீங்கள் எந்தவகை குருதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்? உங்களை தாக்குமா கொரோனா
AB மற்றும் B இரத்த பிரிவு மாதிரி கொண்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் எனவும் O இரத்த மாதிரி கொண்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு எனவும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொழிநுட்ப மற்றும் விஞ்ஞான பிரிவு என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 10,000 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வில் இந்த தகவல் வௌியாகியுள்ளது. O பிரிவு இரத்த மாதிரி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது குறைவு என்பதுடன் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் உயிராபத்து மிகவும் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் நபர்களை விட சைவ உணவுகளை அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது குறைவு என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.