தெஹிபாலேவுக்கு சொந்தமான படகுகள் பறிமுதல்!
'தெஹிபாலே' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான ஐந்து கடற்றொழில் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
திக்வெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல்
அண்மையில் தெற்குக் கடற்பரப்பில் மிதந்து வந்த பாரியளவு போதைப்பொருட்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையிலேயே, 'தெஹிபாலே' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான படகுகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |