உக்ரைன் தலைநகரை சுற்றி கொத்து கொத்தாக மீட்கப்படும் மக்களின் சடலங்கள்
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளதை தொடர்ந்து, அங்கு உக்ரைன் காவல்துறையினர் மற்றும் இராணுவம் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 30 சிறுவர்கள் உட்பட 900-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கீவ் பிராந்திய காவல் படை தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் கூறியுள்ளார்.
தெருக்களிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் மக்களை தெருக்களில் நிற்க வைத்து ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
