வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட அரச உத்தியோகத்தர் : காவல்துறையினரின் அசமந்தம்

Sri Lanka Police Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Mar 08, 2025 12:51 AM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டிலேயே நேற்று (07) சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொ்ர்பில் மேலும் தெரியவருகையில், “வவுனியா, பண்டாரிக்குளம், மூன்றாம் ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சத்தியலிங்கம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

சத்தியலிங்கம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஆசிரியராக பணி 

வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.

பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட அரச உத்தியோகத்தர் : காவல்துறையினரின் அசமந்தம் | Body Of A Family Member Recovered In Vavuniya

இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா காவல்துறையில் தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது

தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது

வவுனியா காவல்துறையினர்

அதன்பின் பிற்பகல் இரண்டு, மணியளவில வவுனியா காவல்துறையினருக்கு, நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் காவல்துறையினர் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட அரச உத்தியோகத்தர் : காவல்துறையினரின் அசமந்தம் | Body Of A Family Member Recovered In Vavuniya

அதன் பின் பிற்பகல் நான்கு மணியளவில் வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 4.30 மணியளவில் வவுனியா காவல்துறையினர் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் காவல்துறை, மாலை ஐந்து மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

உலகப்போரின் ஆரம்பம் : ரகசியமாக அணு ஆயுதங்களை குவித்துள்ள நாடுகள்

உலகப்போரின் ஆரம்பம் : ரகசியமாக அணு ஆயுதங்களை குவித்துள்ள நாடுகள்

மரண விசாரணை 

திடீர் மரண விசாரணை அதிகாரி டா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின்பு, பிற்கபல் 1.50 மணியளவில் இறந்த நிலையில் சடலம் காணப்பட்ட போதும், காவல்துறையினர் தாமதமாக வந்தமையால் மாலை ஐந்து மணிக்கே சடலம் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்று பரிசோதனைகக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட அரச உத்தியோகத்தர் : காவல்துறையினரின் அசமந்தம் | Body Of A Family Member Recovered In Vavuniya

வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருககலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடா மீதான வரி ஒத்திவைப்பு : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

கனடா மீதான வரி ஒத்திவைப்பு : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                       
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்