நுவரெலியா வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!
நுவரெலியா - டொப்பாஸ் வனப்பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம், இன்று (29.10.2025) காலை மீட்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியா காவல்துறை
அவர் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நுவரெலியா காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டொப்பாஸ் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் குழுவொன்று வனப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவரது தந்தையால் அடையாளம் காணப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 12 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்