தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு
Jaffna
SriLanka
Death Body
Thondamanaru
By Chanakyan
தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
80வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
காலை மீன்பிடிக்க சென்ற போது சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட அவர் உடனடியாக அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
ஆலயத்துக்கு வந்த முதியவர் நீரேரியில் குளிக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.