யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்!

Jaffna M A Sumanthiran Sri Lanka Police Investigation Murder Arrest
By Kajinthan Mar 22, 2026 04:54 PM GMT
Report

 யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது இன்றையதினம்(22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது ,பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 

குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வீசப்பட்ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொலைச் சந்தேக நபர்கள் திருகோணமலையில் கைது

பின்னர் கொலை சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர். அதன்பின்னர் விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், சடலத்தையும் மீட்டனர்.

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்! | Body Of The Murdered Lecturer In Jaffna Is Buried

இந்நிலையில் குறித்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சடலம் கோம்பயன்மணல் மயானத்தில் புதைக்கப்பட்டது

கோம்பயன்மணல் மயானத்திற்கு கொலை சந்தேகநபரான, விரிவுரையாளரின் மகள் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மயானத்தில் எந்தவிதமான காட்சிகளையும் பதிவு செய்ய வேண்டாம் எனவும், அப்படி பதிவு செய்தால் கைது செய்யவேண்டி ஏற்படும் எனவும் ஊடகவியலாளர்களை வெளியே நிற்குமாறும் சட்டத்தரணி ஒருவரால் கூறப்பட்டது.

இருப்பினும் ஊடகவியலாளர்கள் குறித்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். சந்தேகநபரை காவல்துறையினர் அழைத்து சென்ற பின்னர், செய்தி சேகரிப்புக்காக இனி படங்கள், காணொளிகள் பதிவு செய்யலாமா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட நிலையில் குறித்த சட்டத்தரணி அதற்கு பின்னரும் பதிவு செய்ய வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்காத காவல்துறை

இருப்பினும் காவல்துறை தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்! | Body Of The Murdered Lecturer In Jaffna Is Buried

இதேவேளை, கொலைச் சந்தேக நபர்களான மகள் மற்றும் மருமகன் ஆகியோரை யாழ்.பதில் நீதவான் வாசஸ்தலத்தில் இன்று(22) முற்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டார்.

கொழும்பு வவுனியா சொகுசு பேருந்தில் பயணித்தவருக்கு நேர்ந்த துயரம்

கொழும்பு வவுனியா சொகுசு பேருந்தில் பயணித்தவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

செய்திகள் -கஜிந்தன்,பிரதீபன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026