பெரியகல்லாறு கடலில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று (04.12.2025) கரையொதுங்கியுள்ளது.
அதன்படி, இன்று (04.12.2025) கடற்கரைக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இவ்வாறு பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.
எனினும் இச்சடலம் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அப்பகுதி பொதுமக்களும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் தெரிவித்தனர்.
காவல்துறையினர் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |