பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் குடும்பத்தினர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!.. (காணொளி)
Goverment
Colombo
Pakistan
Murdered
SriLanka
Priyantha Body
By Chanakyan
பாகிஸ்தான் - சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அவரது சடலமானது நேற்றிரவு முதல் கனேமுல்ல - கெந்தலியத்த பாலுவ பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை சரீரம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றையதினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 25,000,000 ரூபாவை நிவாரணமாக வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்