அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!
Gampaha
Sri Lanka Police Investigation
By pavan
கம்பஹா - வத்தளை பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதேவேளை உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
உயிரிழந்த பெண் பழுப்பு நிற சேலை மற்றும் வெள்ளை நிற நீண்ட கை சட்டை அணிந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது பிரேத பரிசோதனையின் பின்னர் ராகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி