பொகவந்தலாவ பகுதியில் தீ விபத்து: கடையொன்றுக்கு பாரிய சேதம்
பொகவந்தலாவ, நகரில் அமைந்துள்ள வரத்தக நிலையம் ஒன்றில் நேற்று (05) நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் குறித்த வரத்தக நிலையமும், அதிலிருந்த அனைத்துப் பொருட்களும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கும் முயற்சிகளின்போது, அருகிலிருந்த ஒரு கடை மற்றும் ஒரு வீடு ஆகியவை பகுதியளவு சேதமடைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம்
இதன்போது தீயானது பொகவந்தலாவ காவல்துறையினர், உள்ளூர் வர்த்தக சமூகம் மற்றும் அப்பகுதி மக்களின் தீவிர முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஒரு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் அல்லது சேதமடைந்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து பொகவந்தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |