வெடிகுண்டுடன் வந்த மர்மப்பெண்: ரஷ்ய மொஸ்கோ குண்டுவெடிப்பில் மூவர் பலி!
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் மையப்பகுதியில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றிற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 03 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்ய நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி!
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு
மொஸ்கோவின் குட்ரின்க்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள ஸ்டாலின் காலத்து உயரமான கட்டடத்தில் இயங்கும் இத்தாலிய உணவகத்திற்கு வெளியே, அந்நாட்டு நேரப்படி இரவு 8.00 மணிக்கு முன்னதாக இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கே ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்தப் பெண் உட்பட பாதுகாப்புப் பணியாளர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.
வெடிவிபத்தில் காயமடைந்த 21 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிகுண்டு சுமந்து வந்த பெண்
இது குறித்த விசாரணைகளில் அந்தப் பெண் சுமந்து வந்த வெடிகுண்டு தொலைவிலிருந்து வேறொருவரால் இயக்கப்பட்டிருக்கலாம் என்றும், தான் எடுத்துச் சென்றது வெடிபொருள் என்பது அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் உணவகத்தின் வெளிப்பகுதியில் அமர்ந்திருந்த விருந்தினர்களை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நாளில் அந்த உணவகம் தனியார் நிகழ்வொன்றிற்காக முன்பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ நடந்த தற்போது ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |