இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - வெளியேற்றப்பட்ட பயணிகள்...! பரபரப்பு சம்பவம்
இந்தியாவின் (india) இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வழி ஊடாக உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெடிகுண்டு சோதனை
இன்று (28.5.2024) காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர்.
#WATCH | Passengers of the IndiGo flight 6E2211 operating from Delhi to Varanasi were evacuated through the emergency door after a bomb threat was reported on the flight. All passengers are safe, flight is being inspected.
— ANI (@ANI) May 28, 2024
(Viral video confirmed by Aviation authorities) https://t.co/el2q5jCatx pic.twitter.com/ahVc0MSiXz
சற்று நேரத்தில் விமானம் புறப்பட இருந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.
உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#BREAKING | டெல்லி - வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்#SunNews | #Indigo | #BombThreat pic.twitter.com/tTeUpNXoM8
— Sun News (@sunnewstamil) May 28, 2024