வீட்டின் அலுமாரியில் வெடிகுண்டுகள் : ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரி கைது
arrest
army
house
bomb
By Vanan
பாதுக்க – அருக்வத்த பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் தர அதிகாரி ஒருவர் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறை அவசர பிரிவு இலக்கமான 119 க்கு கிடைத்த இரகசிய தகவலின்படி,
குறித்த நபரது வீட்டை சோதனையிட்டதில் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மோட்டார் செல் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு வரவழைக்கப்பட்டு இக்குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.