ஈழத்தின் உணர்வுகளை உயிர்ப்பித்த Bommai: பார்வையாளர்களை உலுக்கிய அனுபவம்
ஈழத்தமிழர்களின் வாழ்வியல் உணர்வுகளை கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் உருவாகியுள்ள Bommai திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடம் ஆழமான உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
IBC Tamil தயாரிப்பிலும், இயக்குநர் நவயுகா குகராஜாவின் உணர்ச்சி பூர்வமான இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், கடந்த காலத்தை வெறும் கதை சொல்லலாக அல்லாமல், உணரப்பட்ட அனுபவமாகவே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது
. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு திரையிடலிலும் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த சிறப்பு காட்சியை பார்த்து வெளியே வந்த பார்வையாளர்கள், “இது ஒரு திரைப்படம் அல்ல; நிஜ வாழ்வின் பிரதிபலிப்பு” என உணர்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும், பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது, இப்படம் அவர்கள் மனதில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஈழத் தமிழர்களின் வரலாறு மற்றும் வேதனைகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு, பொம்மை திரைப்படம் கலை வடிவில் மட்டுமல்லாது, உணர்வுகளின் ஆழத்தை பேசும் ஒரு முக்கியமான படைப்பாகவும் பாராட்டப்படுகிறது.
அநுர அரசால் புறக்கணிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கான முன்னேற்றம்! முன்னாள் நீதியமைச்சர் பகிரங்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்