பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டிற்கு உதவி புரிந்த சந்தேக நபர் அதிரடி கைது!
பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கல மாவத்தையில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகளால் நேற்று (09) பிற்பகல் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 04ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் குறித்த வீட்டில் தங்கியிருந்த 74 வயதான நபர் மீது கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தின் அதிகாரிகள், நேற்று பிற்பகல் மாகும்புர சுதந்திர மாவத்தைக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் வைத்து இந்தச் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொடகம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், அவரே இந்தக் கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் தற்போது மேல் மாகாணத்தின் தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.