கவிழ்ந்தது எரிபொருள் பவுசர் : சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து
கொலன்னாவையிலிருந்து வெலிமடைக்கு 33,000 லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு வளாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய சாலையில் உள்ள கிளன்ட்ரான் வட்ட பகுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசர் சாலையில் கவிழ்ந்ததால், பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் கசிந்தது. உள்ளூர்வாசிகள் கசிந்த எரிபொருளை எடுத்துச் சென்றனர்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் அதிக அளவு எரிபொருள் கசிந்தது
விபத்து நடந்த நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் அதிக அளவு எரிபொருள் கசிந்தது.
கொட்டகலை பெட்ரோலிய கூட்டுத்தாபன சேமிப்பு வளாகத்தின் அதிகாரிகள், விபத்துக்குள்ளான பவுசரில் இருந்து மீதமுள்ள எரிபொருளை பவுசர் வாகனங்களைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெறும் நீர் ஆதாரங்களிலும் எரிபொருள்
பவுசர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கீழே உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெறும் நீர் ஆதாரங்களிலும் எரிபொருள் கலந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் மற்றும் நீர் ஆதாரங்களில் எரிபொருள் கலந்துள்ளதால் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


