தமிழர் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
புதிய இணைப்பு
திருகோணமலை - வரோதயநகர் பகுதியில் உள்ள அரச வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயதான எட்வேட் கோமர்ஸ் என்பவருடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது குறித்த நபர் அணிந்திருந்த உடையை வைத்து இது தனது தந்தை என அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் (Trincomalee) உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் சற்றுமுன்னர் (16) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
