குளிக்கச் சென்ற இளைஞன் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்!
police
people
boy
ambalanthota
By Shalini
அம்பலாந்தோட்டை பகுதியில் கொடவாய கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மூன்றாவது முறையாகவும் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய இளைஞரே நேற்று பிற்பகல் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்..
இவர் தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த போது, கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதில் தம்பி தப்பிவிட்டார் என்றும், அண்ணாவை காணவில்லை என்றும் பொலிஸார் கூறுகிறார்கள்.
காணாமல் போனவர் அம்பலாந்தோட்டையில் மானாஜ்ஜாவ பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய தரிந்து தரங்க ரத்நாயக்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்