தும்புத்தடியால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை! தந்தை கைது
sri lanka
people
galle
By Shalini
காலி - மஹமோதர பகுதியில் 16 வயதான சிறுவன் தும்புத்தடியால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு, காலி பிரதான நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
16 வயதுடைய குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.
வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்துத் தந்தையால் நேற்று பிற்பகல் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மயக்கமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.