யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு!
காதலி தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் பீதியடைந்த இளைஞன் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் நேற்றைய தினம் (16) இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெழுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் தந்தையார் மகனைப் பெண்ணுடன் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என்று பெண் வீட்டாரிடமும் தந்தையார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விடயங்கள் குறித்த பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றும், இதனால் தன்னைத் திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாகவும் பெண் தனது காதலனுக்குத் தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.