ஏறாவூரில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ! தலைமைறைவான சந்தேகநபர்கள்

Batticaloa Eastern Province
By Farook Sihan Jun 16, 2026 11:44 AM GMT
Report

ஏறாவூரில் வீதியால் தனியாகச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்சியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 16 வயதுடைய மற்றொரு சிறுவன் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ஏறாவூர் காவல் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி தளவாய் பகுதியில் 15, 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களைக் கொண்ட மூன்று வாள்வெட்டு குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.

இக்குழுக்களை அப்பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வழிநடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு!

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு!

குழுக்களுக்கிடையேயான மோதல்

மேலும், இக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், குழுக்களுக்கிடையேயான மோதல்கள் காரணமாக அண்மையில் முஸ்லிம் நோன்புப் பெருநாள் காலத்தில் இரவு நேரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலிருந்து வீடு திரும்பியவர்களை இலக்கு வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூரில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ! தலைமைறைவான சந்தேகநபர்கள் | Boy Kidnapped And Attacked In Eravur

இந்நிலையில், பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் வீதியால் தனியாகச் சென்றபோது, எதிர் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை கடத்திச் சென்று ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட கணொளி காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

காணொளி ஆதாரங்கள்

அதனையடுத்து, காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு : அநுர அரசை சாடும் தயாசிறி

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு : அநுர அரசை சாடும் தயாசிறி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026