கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய திருகோணமலை மாணவன்...! காவல்துறையில் சரண்

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Shalini Balachandran Jan 27, 2026 12:23 PM GMT
Report

திருகோணமலையில் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த பாடசாலை மாணவன் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன், இன்று (27-01-2026) நிட்டம்புவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான லாஹீரின் மகனான முக்சித் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவன் ஒருவரின் சர்ச்சைக்குரிய காணொளி! விசாரணைகள் குறித்து எழுந்துள்ள கேள்விகள்

பாடசாலை மாணவன் ஒருவரின் சர்ச்சைக்குரிய காணொளி! விசாரணைகள் குறித்து எழுந்துள்ள கேள்விகள்

கடத்தல்காரர்கள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் நேற்று (26-01-2026) திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில், அவர் தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்ததையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய திருகோணமலை மாணவன்...! காவல்துறையில் சரண் | Boy Missing Trincomalee Yesterday Found

கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய மாணவன், காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட இம்மாணவன், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்து நிட்டம்புவ காவல் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகள்

தமிழர் தாயகத்தில் ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகள்

மேலதிக விசாரணை

குறித்த மாணவன் மீட்கப்படும் போது உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாக காவல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ காவல்துறையினர் திருகோணமலையிலுள்ள மாணவனின் பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய திருகோணமலை மாணவன்...! காவல்துறையில் சரண் | Boy Missing Trincomalee Yesterday Found

தகவலறிந்த பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக நிட்டம்புவ நோக்கி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய சர்ச்சைக்குரிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன

சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய சர்ச்சைக்குரிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016