பிரேசிலில் படகு கவிழ்ந்து 6 பேர் பரிதாப மரணம்!
பிரேசில் நாட்டின் பாகியா மாகாண கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த படகானது சால்வடாரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் சென்றபோதே திடீரென கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
6 பேர் கடலில் மூழ்கி பலி
இதனையடுத்து கடலோர காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 பேரை மீட்டனர். இருந்த போதிலும் இதில் 6 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
இதேவேளை மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுற்றுலா பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |