தன்னை தானே திருமணம் செய்த பிரேசில் மொடல் அழகி : 90 நாளில் விவாகரத்து!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மொடலிங் அழகியான கிரிஸ் கலேரா (Cris Galera ) கடந்த காலங்களில் ஏற்பட்ட காதல் முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என தன்னைத் தானே திருமணம் செய்யும் முடிவை எடுத்திருந்தார்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றது.
கிரிஸ் கலராவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்து 90 நாட்களே ஆன நிலையில், இப்போது தன்னைத் தானே விவாகரத்து செய்வதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
"எனக்கு தற்போது மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துள்ளேன். அதற்கு பிறகு தான் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் வந்தது.
ஆகவே நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன். இருப்பினும் தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்