கட்டுநாயக்காவில் இன்றுகாலை தரையிறங்கிய வெளிநாட்டு ஆசிரியர் கைது
Bandaranaike International Airport
Brazil
By Sumithiran
கட்டுநாயக்காவில் இன்று(20) காலை தரையிறங்கிய வெளிநாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 59 வயதான ஆசிரியரே கைது செய்யப்பட்டவராவார்.
இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)வந்திறங்கிய குறித்த ஆசிரியர் சுமார் 240 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை கடத்த முயன்றபோது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள்
நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் தனது சூட்கேஸில் 4 கிலோகிராம் 855 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி