பிள்ளைகளுக்காக பாண் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மாத்தறை பம்புரனை பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு இருந்ததாக முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார்.
பாடசாலைகளுக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக பாண் துண்டு ஒன்றை வெட்டு போதே அந்த பீடித்துண்டை அவதானித்துள்ளார். முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கிய போது பீடி என தெரியவந்தது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் : நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன்
சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு
பின்னர் நன்றாக வெளியே எடுத்து பார்க்கும் போது பீடியின் பெரிய துண்டு ஒன்று கிடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

குறிப்பாக உணவு உற்பத்தியில் பேக்கரி உரிமையாளர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
