காசாவில் களமிறங்கும் நாய்கள்: கேள்விக்குறியாகும் ஹமாஸின் மன உறுதி(காணொளி)
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்ற யுத்தத்தை எடுத்துக் கொண்டால் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸிற்கும் இடையேயான போர் வலுச் சமநிலை என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்திலேயே இருந்து வருகிறது.
இஸ்ரெலிய படைகளின் ஆயுதப் பலத்துடன் ஹமாஸின் பலத்தை ஒப்பிடவே முடியாது அந்த அளவிற்கு விதம் விதமான நவீன ஆயுதங்களை கொண்ட ஒரு இராணுவம் தான் இஸ்ரேலிய இராணுவம்.
இன்னும் குறிப்பாக கூறப்போனால் உலகிலேயே அமெரிக்காவிற்கு நிகரான நவீனமயப்படுத்தப்பட்ட ஒரு இராணுவம் தான் இஸ்ரேலிய இராணுவம்.
ஆனால் இஸ்ரேலிய இராணுவத்தை காசாவில் எதிர்த்துப் போர் புரிந்துக் கொண்டிருக்கின்ற ஹமாஸ் என்பது ஒப்பீட்டளவில் இஸ்ரேல் இராணுவத்தை விட பல மடங்கு குறைந்த வளங்களுடன் தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றது.
எந்த வித நவீன ஆயுத தளபாடங்களும் இல்லாமல் துப்பாக்கிகள் ஆர்பிஜிகள் ரொக்கெட்டுகள் இது போன்ற இலகுரக ஆயுதங்களை வைத்துக் கொண்டு தான் இஸ்ரேலிய படைகளை காசாவில் ஹமாஸ் அமைப்பினர் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அங்கு சண்டை மாத்திரம் பிடிக்கவில்லை இஸ்ரேலிய படைகளுக்கு ஈடு கொடுத்து பாரிய சேதங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஹமாஸினால் இது எப்படி முடிகின்றது என்பது குறித்து விரவான மற்றும் விளக்கமான தகவல்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி..