யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு !
மேல், சப்ரகமுவ, வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா (R. N. Suriyaraja) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று (06) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பலத்த மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனர்த்தம் குறித்தான தகவல்களை வழங்குவதற்கு DMC, 117 இற்கு அழைக்கவும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |