மார்பக புற்றுநோய் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் சுமார் 6000 புதிய மார்பக புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுகின்றனர்.
அவர்களுள் 1000இற்கும் அதிக நோயாளிகள் உயிரிழப்பதாகவும் புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் செனக தலகல தெரிவித்துள்ளார்.
மருத்துவரை நாடவும்
கொழும்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புற்றுநோய் தடுப்பு தொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புற்றுநோய் வகைகளில் மார்பக புற்றுநோய் பொதுவான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாள்தோறும் 17 புதிய மார்பக புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதோடு அவர்களுள் மூவர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் மற்றும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கூடிய விரைவில் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும் பல நோயாளிகள் நீண்ட காலம் சிகிச்சையை தாமதப்படுத்திய பின்னரே மருத்துவமனைக்கு வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறந்த சிகிச்சை முடிவுகளை பெறுவது கடினமாகிவிடுகிறது எனவும் தெளிவுபடுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |