மட்டக்களப்பில் லொறி மோதி உயிரிழந்த பாடசாலை ஆசிரியர்
மட்டக்களப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திமிலதீவு வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (06) குறித்த விபத்து பதிவாகியுள்ளது.
வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியரான புளியந்தீவினைச் சேர்ந்த கமலநாதன் மதிவதனி (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில் அவரை கைது செய்யவும், விபத்து தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |