அமைச்சரவையை மாற்றியமைப்பது போன்று கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது : சஜித் எச்சரிக்கை!
கிரிக்கெட் நெருக்கடியைத் தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு நேர்ந்த கதியை இலங்கை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொது கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் அறியத்தருகையில்,
கிரிகெட் சங்கங்கள்
“அழிவுப்பாதையிலுள்ள இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, அரசியல்வாதிகள் கிரிக்கெட் சங்கங்களில் பதவிகளை வகிப்பதைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகள் 1975 மற்றும் 1979 இல் உலகச் சாம்பியனாகியது. 1983 இல் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இருப்பினும், இவ்வருட உலகக்கோப்பைப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகளால் தகுதி பெற முடியவில்லை.
முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காண சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கையும் அதே கதியை சந்திக்க நேரிடும்.
அமைச்சரவையை மாற்றியமைப்பது போன்று கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
அரசாங்கம் மற்றும் அதிபரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம்
அதேபோன்று கிரிக்கெட்டை நிர்வகிக்க முடியாது. இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகிகளை யாரும் பாதுகாக்க முயல வேண்டாம்.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தவர்களிடம் கிரிக்கெட் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்