டெங்கு தொற்று குறித்த பிரதமரின் கருத்தை நிராகரிக்கும் சுகாதார அதிகாரிகள்
நாட்டில் டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பதற்கு, டெங்கு வைரஸின் புதிய அல்லது உருமாறிய வகையே காரணம் என பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் சமீபத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுகளை சுகாதார வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர்.
அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த அறிவியல் சான்றும் பெறப்படவில்லை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பத்திரிகை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சிரேஷ்ட வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
வைரஸின் புதிய வகை
இலங்கையில் உள்ள எந்தவொரு ஆய்வகத்தாலும் டெங்கு வைரஸின் புதிய வகை எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸின் பரவிவரும் 'செரோடைப்' மாறியிருக்கலாம் என்றாலும், அதை ஒரு புதிய அல்லது உருமாறிய வகை என்று அழைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "எந்த ஆய்வகமும் ஒரு புதிய வகையைக் கண்டறியவில்லை என கூறியுள்ளார்.
அத்தகைய ஒரு கூற்றை வெளியிட எங்களிடம் போதுமான சான்றுகள் இல்லை என்று வைத்தியர் பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 18 நிமிடங்கள் முன்