இலங்கை நிலவரம் தொடர்பில் பிரித்தானியாவிடம் எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்!
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் மீளக் கட்டியெழுப்புவதற்கு நிலைபேறான மற்றும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அதனை சாத்தியப்படுத்த சரியான வழிகாட்டுதல் தற்போது நாட்டுக்குத் தேவை என்றும் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகருமான மைக்கல் மொரிஸ் நெஸ்பி பிரவுடம் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகருமான மைக்கல் மொரிஸ் நெஸ்பி பிரவு (Lord Michael Neseby) மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
மூடநம்பிக்கைகளை தவிர்த்து அறிவியல் ரீதியாகவேயன்றி வேறு எந்த வகையிலும் நாட்டைக் கட்டியெழுப்புவது நடைமுறைச் சாத்தியமற்றது.
தவறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்தும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






