டியாகோ கார்சியா தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்: அழுத்தம் கொடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானியாவின்(UK) டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, உள்துறைச் செயலரான யவெட் கூப்பருக்கு(Yvette Cooper) அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், சுமார் மூன்று ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களை சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டு பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு சென்றனர்.
மூன்று ஆண்டுகள்
சுமார் மூன்று ஆண்டுகளாக அவர்கள் அனைவரும் அந்த தீவிலேயே அடைபட்டுள்ள நிலையில் அவர்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அவர்களில் 22 பேர் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நடுக்கடலில் Diego Garcia தீவில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, உள்துறைச் செயலரான Yvette Cooperக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழர்கள்
ஏற்கனவே, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசமான Diego Garciaவின் ஆணையரான Paul Candler என்பவர், அந்தத் தீவில் சிக்கித் தவிக்கும் சிலரையாவது பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வெளியுறவுச் செயலரான David Lammyக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
ஆனால், 22 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து, மீண்டும் அவர் வெளியுறவு அலுவலக அமைச்சரான Stephen Doughtyக்கு, இந்த அவசர நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நிலைமை மோசமடைவதால், தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள 64 பேரையுமே பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |