பிரித்தானியா - போலந்துக்கிடையே கைச்சாத்திடப்படவுள்ள புதிய ஒப்பந்தம்
பிரித்தானியா (United Kingdom) மற்றும் போலந்து (Poland) இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), வெள்ளிக்கிழமை வார்சாவில் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு குறித்து விவாதித்தனர்.
இந்த சந்திப்பானது, கெய்ர் ஸ்டார்மர் உக்ரைன் (Ukraine) பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு நடந்துள்ளது.
சர்வதேச பாதுகாப்பு
போலந்து பிரதமர், யூரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவராகவுள்ள நிலையில் அதன் முன்னுரிமைகளை ஸ்டார்மருக்கு விளக்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள், அகதிகள் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மீது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பால்டிக் மற்றும் வட கடல்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை 2025 இல் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |