இலங்கைக்கு படையெடுத்துள்ள போர்க்கப்பல்கள்
பிரித்தானிய மற்றும் இந்திய கடற்படைக்கு கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளன.
இதன்படி பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான கென்ட் என்ற போர் கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான 02 போர்க் கப்பல்கள் இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஷாதுல் மற்றும் மாகர் என்ற குறித்த கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Sujata’, ‘Sudarshini’, ‘Tarangini’ and Indian ‘Vikram’ஆகிய இந்திய போர்க் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் தரித்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.


