உக்ரைன் மீதான போரை உடன் நிறுத்து! பிரித்தானியாவில் பேரணிக்கு அழைப்பு
people
russia
ukraine
british
Struggle
By Thavathevan
போரினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்தும், பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் ஆதரவை தெரிவித்தும் பிரித்தானியாவில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற இருக்கின்றது.
கடந்த ஒன்பது நாட்களாக ரஷ்யா பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களை ஈவிரக்கமின்றி குண்டுகளை வீசி கொன்றுகுவித்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.
இது நாடு கடந்த தமிழீழ அரசாங்காத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணிக்கு, Marble Arch Underground Station அருகில் ஆரம்பமாகும்.
இக் கண்டனப் பேரணியானது, பிரித்தானியாவின் Trafalgar Square இல் உக்ரைனிய மக்களால் நடாத்தப்பட்டுவருகின்ற கண்டன ஆர்ப்பாட்ட இடத்தைச் சென்றடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி