கைதில் இருந்து விடுவிக்கப்பட்ட ராகுல்காந்தி! மோடி அரசுக்கு புதிய நெருக்கடி
இந்தியாவின் புதுடெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கல்வி முறை எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களால் இயக்கப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள், 2024-ல் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரது அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளன.
இதில் போராட்டக்காரர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புது டெல்லியில் பதற்றம்! மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் கரப்பான் பூச்சி ஆர்பாட்டத்தில் தடியடி தாக்குதல்
போராட்டத்தில் ராகுல் காந்தி
மாணவர்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டியும், புதுடெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறையைக் கண்டித்தும் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவில் தேர்வு சர்ச்சைகளைக் கையாள்வது தொடர்பாக அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள அந்நாட்டு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சீர்திருத்தங்களைச் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கடந்த திங்கள்கிழமை நடந்த தெருப் போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் கருத்துக்களில் அவர், 'அதை வழங்குவதில்தான் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
பாதுகாப்புப் படையினர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய போராட்டமான இந்த போராட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியபோது, அவர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியிருந்தது.

60 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், மேலும் 118 காவல்துறைப் பணியாளர்கள் காயமடைந்ததாகவும் இந்திய பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூருவிலும் போராட்டங்கள் நடைபெற்தாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
மே மாதம் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்துள்ள நிலையில், 2024-ல் மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பிறகு அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தியாவின் தேர்வு முறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைத்த தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அவற்றுள், இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களை மீண்டும் தேர்வு எழுத நிர்பந்தித்த மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்