பிரிட்டன் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பிரதமர் ரிஷி சுனக்
கொரோனா காலத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடும்பங்களிடம் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா்.
கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை முன்னாள் பிரதமா் பொறிஸ் ஜோன்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு
இந்த விசாரணையில் தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் திங்கள்கிழமை முன்னிலையாகி விளக்கமளித்தாா்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொறிஸ் ஜோன்சன் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா். மேலும், கொரோனா பேரிடா் காலத்தில் அரசு எடுத்த கடுமையான முடிவுகளால் பாதிக்கப்பட்டவா்களிடமும், கொரோனாவால் சொந்தங்களை இழந்த குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
வருங்காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொண்டுள்ளோம். அது வருங்காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் என்று ரிஷி சுனக் தெரிவித்தாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |