தமிழர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது
மட்டக்களப்பு காவல்துறையினரால் பரவலாக தேடப்பட்டு வந்த கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வெலிகந்தை தொடக்கம் அக்கரைப்பற்று வரை சுமார் 30 வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட 28 வயது நிறைந்த இளைஞனே வாழைச்சேனையில் வைத்து நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் கதவை உடைத்து
கைது நடவடிக்கையின் போது இவரிடம் இருந்து மடிக்கணினி மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர், கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் மட்டக்களப்பு தலைமையக காவல் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியிலுள்ள, கண்ணகி அம்மன் வீதியில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்து மடிக்கணினி தங்க மோதிரம் , பணம், மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றைத் திருடிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வாழைச்சேனை ஹாயிரா பள்ளி வீதியைச் சோந்த 28 வயதுடைய இளைஞன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெலிகந்தை தொடக்கம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்