காலி முகத்திடலில் நபரொருவர் மீது சரமாரி தாக்குதல் : வெளியான அதிர்ச்சி காணொளி
கொழும்பு (Colombo) காலி முகத்திடலில் நபரொருவர் மீது இனம் தெரியாத நபர்கள் நடத்தும் தாக்குதல் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரை திருடர் என கூறி அங்கிருந்த இனம் தெரியாத குறிப்பிட்ட சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான நபர் வலிதாங்கமுடியாமல் அழுதமையினால் அருகிலிருந்தவர்கள் காவல்துறையினருக்கு எச்சரிப்பதாக கூறி தாக்குதலை நிறுத்தியுள்ளனர்.
இருப்பினும், தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தமையை காணொளியில் காணக்கூடியதாக இருந்தது.
மேலும், அண்மைய நாட்களாக குழுக்களுக்கிடையிலான தாக்குதல்கள், கொலைகள் என தென்னிலங்கை மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதுடன் அரசாங்கம் மீதான அதிருப்பியும் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
