உகந்தை முருகன் ஆலயத்தில் முளைத்த புத்தர் சிலை : தொடரும் சர்ச்சை

Sri Lankan Tamils Ampara Sri Lanka Sri Lanka Navy Hinduism
By Raghav May 30, 2025 08:43 AM GMT
Report

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் (Ukantha Murugan kovil) கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறி வருகின்றது.

அம்பாறை (Ampara) மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும் வரலாறும் கொண்ட உகந்தை முருகன் ஆலய பிரதேச பகுதியில் காணப்படும் ஒரு மலையில் திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை ஆராயும் விதமாக எமது ஊடகவியலாளர் உட்பட சக செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு சென்று குறித்த புத்தர் சிலை நிர்மாணம் குறித்து ஆராய்ந்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - திடீர் விஜயம் செய்த அமைச்சர் சந்திரசேகர்

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - திடீர் விஜயம் செய்த அமைச்சர் சந்திரசேகர்

புத்தர் சிலை 

இதற்கமைய ஆலயத்தில் இருந்தவர்களிடம் இது தொடர்பில் கேட்கும் “போது இந்த புத்தர் சிலை நிறுவுகின்ற விடயம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது. போன்று 2023இல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் 2024இல் ஒரு புத்தர் சிலை இங்கே நிறுவப்பட்டது என்றும் கூறப்பட்டது.

உகந்தை முருகன் ஆலயத்தில் முளைத்த புத்தர் சிலை : தொடரும் சர்ச்சை | Buddha Statue Erected Near Ukanta Murugan Temple

அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக இந்த புத்தர் சிலை பெரிய அளவிலே இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் நேரடியாக அங்கு சென்றவர்கள் அவதானித்து, அந்த இடத்தில் முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தில் வலது புறம் வள்ளியம்மன் மலை தோணிமலை போன்றவைகளும் இடது புறம் கடற்படை முகாமோடு இணைந்ததாகக் காணப்படுகின்ற ஒரு மலையும் அந்த மலையில் தான் இந்த புத்தர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கின்றனர். இது உகந்தை ஆலய பிரதேசம் என்பது சைவத் தமிழர்களுடைய பூர்வீகமான ஒரு வரலாற்றிடம் இங்கு எவ்வாறு இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டது. 

சிறை செல்லப் போகும் முக்கிய புள்ளிகளின் அடுத்த பட்டியல்: அரசாங்க தரப்பிலிருந்து தகவல்

சிறை செல்லப் போகும் முக்கிய புள்ளிகளின் அடுத்த பட்டியல்: அரசாங்க தரப்பிலிருந்து தகவல்

சிவில் உடை தரித்த இருவர்

யாரால் நிறுவப்பட்டது? ஏன் நிறுவப்பப்பட்டது? இதனுடைய பின்னணி என்ன? என்பதை பற்றி எல்லாம் ஆராயப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

உகந்தை முருகன் ஆலயத்தில் முளைத்த புத்தர் சிலை : தொடரும் சர்ச்சை | Buddha Statue Erected Near Ukanta Murugan Temple

இந்நிலையில் நாங்கள் அவதானித்த போது இந்த புத்தர் சிலை கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை தரித்த இருவரால் அந்த சிலையுள்ள மலை துப்பரவு செய்யப்பட்டதையும் காண முடிந்தது.

இந்த சிலை அவர்களுக்கு தெரியாமல் அங்கு வேறு யாரும் நிறுவியிருக்க முடியாது. இது அவர்களுடைய கடற்படை முகாமுடன் காணப்படும் மலை பிரதேசம் என்பதையும் நாங்கள் அறிந்து கொண்டதோடு இது அவர்கள் வழிபடுவதற்காக நிறுவியிருக்கலாம் என்றொரு கருத்தும் அங்கு கூறப்பட்டது. 

அவ்வாறு கடற்படையினர் வணங்குவதாக இருந்தால் அதை அவர்களது முகாமினுள் வைத்திருக்கலாமே ஏன் அதை பொது வெளியில் அதுவும் உகந்தை முருகன் திருவம்பாவை காலத்தில் தீர்த்தமாடுகின்ற அந்த பிரதேசத்தில் நிறுவினார்கள் எனும் கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஆரம்பமானது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஆரம்பமானது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

உகந்தை முருகன் ஆலயம்

மேலும் உகந்தை முருகன் திருவெம்பாவை காலத்தில் தீர்த்தம் ஆடுகின்ற அந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்தது என்றும் இப்போது அந்த சூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்றும் அது யாரால் ஏன் அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உகந்தை முருகன் ஆலயத்தில் முளைத்த புத்தர் சிலை : தொடரும் சர்ச்சை | Buddha Statue Erected Near Ukanta Murugan Temple

மேலும் நேற்றைய தினம் ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினரும் வந்து தங்களிடம் இதை யார் புகைப்படம் எடுத்தது? யார் ஊடகங்களில் வெளியிட்டது என்று கேட்டிருந்தார்கள் என்றும் அங்கு சென்றவர்களால் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அந்த காவல்துறையினரையும் அப்பகுதியில் காண முடிந்தது. மேலும் அந்த இடத்தில் ஒரு அச்சமான பதட்டமான சூழலையும் நாங்கள் அவதானித்தோம் என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

அதேவேளை, உகந்தை முருகன் ஆயத்தின் மலையில் வள்ளியம்மன் ஆலயத்தை அண்டியதாக அமைக்கப்படவிருந்த முருகன் சிலையினை அமைக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்திய வனஇலாகா மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஏன் இந்த புத்தர் சிலையினை நிறுத்தவில்லை என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுப்பப்படுகின்றது.

யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம்

யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம்

புத்தர் சிலையின் பின்னணி

எனவே, இதன் பின்னணி என்ன என்பதையும் இது தொடர்பான உண்மைகளையும் உரிய திணைக்களங்கள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதோடு, இந்த சிலை நிறுவிய விடயம் சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியையும் தங்களுடைய உரிமை மறுக்கப்பட்டு இன்னும் ஒரு சமூகத்திற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கின்ற விடயத்தையும் பேசுபொருளாக்கி இருக்கிறது.


ஆகையால், இந்த அரசாங்கம் உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த சிலை பற்றிய விடயத்தை நாங்கள் பேசுகிறபோது சன்னியாசி மலையும் எங்களிடம் இருந்து பறிபோயிருக்கிறது அங்கும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியுள்ளார்.  

பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

TIN இலக்கத்தைப் பதிவு செய்ய அறிமுகமான கியூஆர் குறியீடு

TIN இலக்கத்தைப் பதிவு செய்ய அறிமுகமான கியூஆர் குறியீடு

ஒட்டுமொத்த உலகையும் மிரள வைத்த யாழ். தமிழன் : யார் இந்த வேடன்?

ஒட்டுமொத்த உலகையும் மிரள வைத்த யாழ். தமிழன் : யார் இந்த வேடன்?

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

you may like this


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021