திருகோணமலை பௌத்த ஆக்கிரமிப்பு : கூட்டமைப்பின் தலைவர் ரணிலுக்கு கடிதம்
திருகோணமலை - இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதன் காரணமாக அண்மையில் அமைதியின்மை ஏற்பட்டது.
தொடர்ந்தும் அபிவிருத்தி நீடித்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
99 வீதமான தமிழர்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரும்பத்தகாத விளைவுகள்
இதனால், பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சம்பந்தன் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் உள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படக் கூடாது என்று தாம் கூறவில்லை.
ஆனால், வெளிநாட்டு முதலீட்டுடன் கணிசமான அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும்போது சமூக சூழலை சீர்குலைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.