தமிழர் தாயகங்களில் நிறுவப்படும் பௌத்த சின்னங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் தொல்பொருள் திணைக்களம் பௌத்த சின்னங்கள் என்ற பெயரிலே கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றின் ஊடாக எங்களுடைய காணிகளை கையகப்படுத்தி அதிலே பௌத்த விகாரைகளையும் சின்னங்களையும் நிறுவி சிங்கள பௌத்த நாடாக இந்த நாட்டை மாற்றுகின்ற திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (02) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் அடிப்படைக் கொள்கையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார்கள். அநுர அரசு கூட அதில் மிகவும் தெளிவாக இருக்கின்றது என்பதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றை எதிரப்பதற்கு தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தையிட்டி போராட்டம், மல்லாக நீதிமன்ற வழக்கு, நயினாதீவு விகாராதிபதியின் தையிட்டி விஜயம் தொடர்பாக வேலன் சுவாமிகள் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |