ஐ.எம்.எப் வேலைத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து வெளியான அறிக்கை : வெரிடேஜ் ரிசேர்ஜ்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இதற்கு முன்னர், 'தெரியாதது' என வகைப்படுத்தப்பட்ட ஆறு செயற்றிட்டங்களின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் சார்ந்த ஆதார ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் பல துணை ஆதார ஆவணங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தற்போதைய வேலைத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை நவம்பர் மாதத்தில் மேம்பட்டுள்ளதாக Verité Research இன் 'IMF Tracker' இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
நவம்பர் இறுதிக்குள் வழங்க வேண்டிய 73 வாக்குறுதிகளில், 12 'நிறைவேறவில்லை', 15 'தெரியாதவை' மற்றும் 46 நிறைவேற்றப்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன்
எனவே, நவம்பர் இறுதிக்குள் பூரணமாக வேண்டிய 63% உறுதிமொழிகள் சரிபார்க்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன் எதிர்பார்த்த அளவிலும் குறைவாகவே உள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியம் நாளை (11) இத்திட்டத்தின் இரண்டாம் தவணை நிதியான சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலரை பெறுவது குறித்து வாக்களிக்கவுள்ளது, இந்த நிதியானது முதலில் செப்டம்பரில் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
IMF Tracker என்பது இலங்கையின் 17வது IMF திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 வாக்குறுதிகளை கண்காணிக்கும் முதல் மற்றும் ஒரே தளமாகும்.
வெரிடே ரிசர்ச்சின் manthri.lk தளத்தின் https://manthri.lk/en/imf_tracker என்ற இணையதளத்தில் பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களை பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |