"வரவு செலவுத்திட்டம், தோல்வியான புடலங்காய் திட்டம்" - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
நாட்டின் தற்போதைய ஆட்சியின் கீழ் மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் (Sirimavo Bandaranaike) ஆட்சி காலத்தில் இருந்த வரிசை யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதன் முன்னர், சீனியில் இருந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம், தோல்வியான புடலங்காய் திட்டம் எனவும் அதன் மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
இரண்டு வருடங்கள் முடிவடைவதற்குள் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியே சென்றால், மக்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டுவார்கள்.
மக்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன் பதவிகளை வழங்கி எனது வாயை மூடி விட முடியாது" என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.