2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஜனாதிபதியின் கைகளுக்கு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆய்வு செய்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை (12) பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நான்கு சனிக்கிழமைகளும் விவாத நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நிலையியற் கட்டளைகளின் கீழான நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும், காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடை எதிர்பார்க்கப்படும் ஐந்து கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான ஒரு கேள்விக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |