இலங்கையின் ஒரு நாளுக்கான வரவு செலவு: பற்றாக்குறையாக காணப்படும் பாரிய தொகை
அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 842 கோடி ரூபாயாகவும், நாளாந்த செலவு 1467 கோடி ரூபாவாகவும் இருப்பதால், அன்றைய தினம் செலுத்துவதற்கு போதாத தொகை 625 கோடி ரூபாய் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, இந்த நாட்டை ஆள முயற்சிக்கும் அனைவரும் ஒரு நாள் அந்த அரசாங்கத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவதானம்
வாக்கு கேட்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் வாக்களிக்க விரும்புவோர் இந்த நிலை குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் நிலை தொடர்பில் தான் இங்கு குறிப்பிடுவதாக தெரிவித்த அவர், சுதந்திரம் பெற்று பல வருடங்களில் ஏற்பட்ட நிலையே இது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |